டயட்ல இருக்கவங்களுக்கான ஒரு ஹெல்த்தி ஸ்மூத்தி..
டயட்ல இருக்கவங்க எதையும் சாப்பிட முடியாமல் இருப்பார்கள். ஆனால் இந்த ஸ்மூத்தி செய்து டயட்லயும் சாப்பிடலாம். வாங்க எப்படி செய்லாம்னு பாக்கலாம்.
இந்த ஸ்மூத்தி செய்து எல்லா வயது ஆண்களும் , பெண்களும் சாப்பிடலாம்.உடல் பருமனை குறைக்க கூடிய பொருட்களை சேர்த்து தயாரிக்கும் பட்சத்தில் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ளலாம்.
அன்றாடம் செய்யும் உடற்பயிற்ச்சிக்கு பிறகு இந்த ஸ்மூத்தியை குடித்து வரலாம் அல்லது காலை உணவாக உங்களது டயட் லிஸ்டிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த ஸ்மூத்தியுடன் உடற்பயிற்சி தினசரி முடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் செயல்படலாம்.
உடல் பருமனை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த ஸ்மூத்தியை தாராளமாக பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
பேரிச்சம் பழம் – 3
வாழைப்பழம் – 1
வேர்கடலை – 2 ஸ்பூன்
பால் – 50 மி.லி
தேன் – 1 ஸ்பூன்
காபி தூள் ஒரு சிட்டிகை
செய்யும் முறை:
மேலே சொன்ன பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக மிக்சி ஜாரில் போட்டு அதில் பால் மற்றும் ஐஸ்கியூப் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு டம்ளரில் ஊற்றி, காப்பி தூள் தூவி பரிமாறினால் ஸ்மூத்தி ரெடி.இதனை காலை உணவுக்கு பதிலாக சாப்பிடலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..