சருமத்தை அழகாக்கும் கேழ்வரகு..! இந்த மேஜிக் ட்ரை பண்ணுங்க…!!
கேழ்வரகு ஃபேஸ் பேக் நம்முடைய முகத்தில் உள்ள சரும துளைகளை ஆழமாக சுத்தப்படுத்துவதுடன்,பழைய செல்களை நீக்கி,பொளிவான சருமத்தை கொடுக்கிறது.
நம்முடைய சருமத்திற்கு புது ஊட்டச்சத்தைகொடுத்து சருமம் இளமையாக வைக்க உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கேழ்வரகு மாவு எடுத்துக்கொண்டு சிறிது தயிர் கலந்து ஊற வைத்த பிறகு, அதனை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
முகத்தை பாலில் நனைத்த பஞ்சு வைத்து நன்றாக துடைத்த பின்னர்,இந்த பேஸ் பேக் எடுத்து முகத்தில் அப்ளை செய்து கொண்டு அரை மணி நேரம் அழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் மறைந்து சருமம் புத்துணர்ச்சியாகவும் பொலிவாகவும் இருக்கும்.
கேழ்வரகு ஃபேஸ் பேக்கின் பயன்கள் :
சருமத்தை ஸ்க்ரப் செய்ய பயன்படுகிறது.
ஃபேஸ் பேக் போட உதவுகிறது.
முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை சுத்தமாக வைத்துகொள்கிறது.
சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..