இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும் 5 வகை ஜீஸ்..!
நீரிழிவு நோய் உடையவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. டயட்டை சிறந்த முறையில் பின்பற்றுவது , நடைப்பயிற்சி செய்யும்போது, மருத்துவர் கொடுத்திருக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வது, ஸ்ட்ரெஸ் இல்லாத நிலையில் இருக்கும்போதுதான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்து கொள்ள முடியும்.
மேலும் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறி மற்றும் பழங்கள் வைத்து ஐந்து வகையிலான ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.
ஐந்து வகையான ஜீஸ் எப்படி தயார் செய்வது என பார்ப்போம்.
1. காலே, எலுமிச்சை ஜீஸ்: காலேவில் அதிக அளவில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. எலுமிச்சை ரத்த சர்க்கரை அளவை சமைநிலையில் வைக்கவும், உடலை புத்துணர்ச்சி ஊட்டவும் உதவுகிறது.
2. பசலை, வெள்ளரி ஜீஸ்: பசலை கீரையானது குறைந்த கலோரியும் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும் கொண்டது. வெள்ளரி நச்சுகளை உடலில் இருந்து நீக்கவும், இது உடலை நீரேற்றத்துடனும் வைக்க உதவுகிறது.
3. கிரீன் ஆப்பிள், செலரி ஜீஸ்: கிரீன் ஆப்பிள் இயற்கையான இனிப்பு சுவையும் அதிகமான நார்ச்சத்தும் கொண்டுள்ளது. இது செரிமானம் சீராக நடக்கவும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவியாகிறது. செலரியில் இருக்கும் அதிகபடியான நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைக்கிறது.
4. இஞ்சி, புரோக்கோலி ஜீஸ்: இஞ்சி இன்சுலின் சென்சிட்டிவிட்டி மேன்மையடைய உதவுகிறது. புரோக்கோலியில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
5. புதினா, எலுமிச்சை ஜீஸ்: புதினா செரிமானத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.