ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ; அஞ்சு டிப்ஸ் – 12
ஆரோக்கியமாக வாழ்க்கைக்கு தேவையான சில முக்கியமான உணவு குறிப்புகள் பற்றி கடந்த சில தினங்களாக பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது.
கத்தரிக்காய் : கத்தரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் கீல்வாதம் பித்தம் மற்றும் வாதம் போன்றவற்றை சரி செய்கிறது.

வெண்டைக்காய் : வெண்டைக்காயில் நார்ச்சத்தும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி, அதிகம் இருப்பதால்.., நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது மற்றும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கவும் உதவுகிறது.

கேரட் : கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம், நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பார்வை குறைபாடு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. மேலும் சருமத்தை அழகாக வைக்க உதவுகிறது.

பீட்ரூட் : பீட்ரூட்டில் மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் சோடியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் ரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

கொண்டைக்கடலை : கொண்டைக்கடலையில் மக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், முதுகு தண்டில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி