கொய்யாக்காவில் இவ்வளவு நன்மைகளா..!
அனைத்து சீசன்களிலும் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று கொய்யாக்காய்.., இந்தியாவில் விளைய கூடிய ஒரு பழம் என்பதால் கொய்யா மரத்தை நாம் எங்கும் பார்க்கலாம். அப்படி எளிதாக கிடைக்கும் கொய்யாவின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
* கொய்யாக்காய் சாப்பிடுவதால் மலசிக்கல் பிரச்சனை நீங்கும்.
* இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்.
* குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து காக்கிறது.
* கொய்யாவில் வைட்டமின் சி, இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
* மேலும் ரத்தக்குழாய், எலும்பு தோல் மற்றும் உடல் உள் உறுப்புகளில் கொலாஜன் சேர்க்கையை அதிகரிக்கச் செய்கிறது.
* வைட்டமின் ஏ-வும் இதில் அதிகம் இருப்பதால் கான் பார்வையை சீராக்கு கிறது.
* இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
* கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவும்.
* இதய நோய் உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி.
Discussion about this post