மூளை உற்சாகமாக இருக்க இதை பண்ணுங்க…
1. எழுதுதல், வாசித்தல்: புத்தகங்களை வாசிக்கும்போது அது நம்முடையை அறிவுத்திறனை வளர்க்கிறது. மூளைக்கு சுறுசுறுப்பு தருகிறது. எழுதுதல் என்பது மூளைக்கு ஒரு பயிற்சியாக இருக்கிறது இதனால் மூளை உற்சாகமாகிறது. இது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவிகிறது.
2. புதியதை கற்றல்: புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக இசைக்கருவிகள் வாசிக்க பழகுவது, தெரியாத மொழிகளை கற்றுக்கொள்ளுதல் ஆகியவை நம்முடைய மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது.
3. மூளை விளையாட்டு மற்றும் புதிர்கள்: புதிர் விளையாட்டுகள், செஸ், குறுக்கெழுத்து விளையாட்டு, புதிர்களை கண்டுபிடிப்பது ஆகியவை மூளைக்கு நல்ல ஆற்றலையையும் நினைவுத்திறனையும் வளர்க்கிறது. சிக்கலை தீர்க்கும் ஆற்றலை மூளை பழகுகிறது.
4. உடற்பயிற்சி: உடற்பயிற்சி உடலையும் மூளையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
5. தியானம், யோகா: தியானம் செய்வதினால் மனதில் இருக்கும் அழுத்தம் குறைத்து அறிவாற்றலை அதிகரிக்கிறது. ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் நம்முடைய கவனத்தை அதிகரிக்கிறது. பதற்றம் மற்றும் அழுத்தத்தை குறைத்து கவனத்தை மேம்படுத்துகிறது.
6. சமூக செயல்பாடுகள்: எப்போதும் வீட்டிலே அடைந்து கிடக்காமல் அவ்வபோது வெளியில் சென்று சமூக செயல்களில் ஈடுபட வேண்டும். இது மனதிற்கு ஒருவித சந்தோசத்தை தரும். பிறருக்கு உதவுதல், பழகுதல் போன்ற செயல்பாடுகள் மூளையை உற்சாகப்படுத்தும்.
7. நினைவுப் பயிற்சி: ஞாபக சக்தியை அதிகரிக்க நினைவு பயிற்சியை செய்ய வேண்டும். படித்ததை அப்படியே கதையாக சொல்வது, நினைவாற்றலை அதிகரிக்கும் விளையாட்டு விளையாடுவது ஆகியவை நல்ல பயிற்சியாகும்.