காலியான லால்குடி தொகுதி..! திமுக எம்எல்ஏ போஸ்டரால் திடீர் பரபரப்பு..!
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் சௌந்தரபாண்டியன். தொடர்ந்து மூன்று முறையாக லால்குடி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார்.
தமிழக அரசானது ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்கு ஏற்ற பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் திருச்சி லால்குடி தொகுதியில் மக்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்த பேருந்து நிலையத்தை கட்டிக் கொடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய அலுவலகம் மேலும் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவைகளை கட்டுவதற்கு இடங்களையும் பார்த்து வருகிறது.
அந்த வகையில் இது குறித்து அமைச்சர் கே என் நேரு நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். மேற்கொண்டு இது குறித்த பதிவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆனால் இதில் முக்கிய நிர்வாகியாக கலந்து கொள்ள வேண்டிய எம்எல்ஏ சௌந்தர்யா பாண்டியன் அதில் பங்கேற்கவில்லை.
சமீபகாலமாகவே சௌந்தரபாண்டியன் அவர்கள் தொடர்ந்து உட்கட்சி மோதலால் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுவதில்லை.
இதன் உச்சகட்டமாக தான் கே.என்.நேரு பதிவிட்டு இருந்த பதிவுக்கு கீழ் சௌந்தரபாண்டியன் கமெண்ட் ஒன்று செய்துள்ளார். அது தற்பொழுது ஆளும் கட்சிக்குள் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.
அதில் அவர் கூறியதாவது, லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ காலமானதால் அந்ததொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் இதுவரை நான் கலந்துகொள்ளவில்லை.., அதனால் தான் தற்போது இந்த நிகழ்ச்சியிலும் என்னால் பங்கேற்க முடியவில்லை.. எனவே இதை மையமாக வைத்து அதை பேசும் பொருள் ஆக்க வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார்…
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..