பற்களை பலப்படுத்தும் ஐந்து வகை உணவுகள்…
பச்சை நிற இலை கொண்ட காய்கறிகளில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பற்களின் எனாமல்களை பாதுகாக்கிறது.
பால் மற்றும் பாலால் உருவான பொருட்களை சாப்பிடுவதால் பற்கள் பலமாக இருக்கும். மேலும் இதில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் பற்களின் எனாமலை காக்கிறது.
கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிடும்போது அது இயற்கையாகவே ஈறுகளையும் பற்களையும் சுத்தப்படுத்துகிறது. இதனால் உமிழ் நீர் அதிகரித்து வாயினில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது.
மீனை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 ஆகிய அமிலங்கள் உடலில் கால்சியம் சத்தை உறிஞ்சுகிறது இதனால் பற்கள் பலமாகிறது.
தாவர வகை விதைகள் மற்றும் கொட்டைகளில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை பல் எனாமலை பாதுகாத்து , செரிமானத்தை சரிச்செய்கிறது.