வெறும் வயிற்றில் குடிக்கும் பானங்களும் உடலில் ஏற்ப்படும் மாற்றங்களும்…!
சீரகம் வயிற்று செரிமானத்திற்கு நல்லது. இதை காலையில் குடிப்பதால் உடலுக்கு ஒரு எனர்ஜி பொருளாகவும், உடம்பில் இருக்கும் மந்த தன்னையையும் நீக்கக்கூடிது.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு கொதிக்கவிட்டு பின் வடிகட்டி குடிக்க வேண்டும்.
ஓமம் தைமாலை கொண்டுள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடல் எடை குறைதலையும் ஊக்குவிக்கிறது.
ஒரு கப் நீரில் அரை ஸ்பூன் ஓமத்தை போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம்.
தேங்காய் தண்ணீரை நம்முடைய வெறும் வயிற்றில் குடிப்பதினால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடை குறைக்க உதவிகிறது. இதில் அதிக கனிம வளங்கள் காணப்படுகிறது. இதனால் உடலுக்கு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியை தக்க வைக்கிறது.
காய்கறிகளை ஜீஸ் செய்து குடிப்பதினால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு எளிதாக கிடைக்கிறது. கீரைகளை இப்படி உட்கொள்வது உடலுக்கு ரொம்ப நல்லது. இரும்பு சத்து உள்ள காய்கறிகளை தேர்வு செய்யுங்கள், இது உங்களுக்கு ஆக்ஸிஜன் தருவதோடு சோம்பலையும் விரட்டக்கூடியது.
தேர்வு செய்த காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு ஃபிளண்ட் செய்து சாப்பிடலாம்.
கற்றாழை ஜீஸ் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. எரிச்சல் கொண்ட குடலுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது வயிற்று செரிமான தொந்தரவு, மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லைக்கு தீர்வாக அமைகிறது.
கற்றாழையை வெட்டி அதினுள் இருக்கும் ஜெல்லை எடுத்து நன்றாக நீரால் கழுவி ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து அதில் நீர் கலந்து குடிக்க வேண்டும்.
இஞ்சி நீரை காலையில் குடிப்பதால் வயிற்றுக்கோளாறுகள் மற்றும் வயிற்றுப்போக்கை சரிசெய்கிறது. இஞ்சி மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது தசை வலியை நீக்கக்கூடியது.
இஞ்சியை நறுக்கி அதில் ஒரு கப் நீரை கலந்து கொதிக்க வைத்து பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
தக்காளியில் 95 சதவீதம் நீர் உள்ளதால் இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடம்பில் உள்ள தொற்றுக்களி அழித்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்கியை அதிகரிக்கிறது.
ஒரு மிக்ஸியில் தக்காளி மற்றும் தண்ணீர் போட்டு அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.