தீபாவளிக்கு ஆஸ்துமா நோயாளிகள் இதை செய்யுங்க..!
தீபாவளி நாட்களில் காற்றில் பல்வேறு விதமான தூசிகள் கலக்கும், பட்டாசுகளில் இருந்து வரும் புகையில் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு உள்ளன இவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு கெடுதலை விளைவிக்கும்.
ஆஸ்துமா நோயாளிகளின் கவனத்திற்கு:
- தீபாவளிக்கு முன்னாடியும் பின்னாடியும் உங்கள் மருத்துவர் சொல்லும் மருந்துகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெராய்குகள் மற்றும் இன்ஹேலர் போன்ற மருந்துகளை கட்டாயமாக உபயோகிக்க வேண்டும்.
- தீபாவளிக்கு முன்பாக உங்களின் வீட்டை சுத்தமாக தூசிகள் இல்லாதவாறு சுத்தம் செய்து சுத்தமான காற்றை சுவாசிக்க தயாராக இருக்க வேண்டும்.
- தீபாவளியின் போது குறிப்பாக மாலையில் வெளியில் செல்லக் கூடாது. தூசிகள் மற்றும் அழுக்குகள் இருக்கும் மாலை நேரங்களில் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
- ஒருவேளை வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் N95 மாஸ்க் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். இது காற்றில் இருக்கும் துகள்கலை வடிகட்டி உங்களின் சுவாச மண்டலத்தை பாதுகாக்கிறது.
- அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும், இது சுவாச மண்டலத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
- தீபாவளி காலங்களில் புகைப்பிடித்தல் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். காரணம் இந்த நாட்களில் ஆஸ்துமா மிகவும் அதிகமாகும்.
- தீபாவளி நாட்களில் அதிக கொழுப்பு மற்றும் காரம் உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது ஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்தும்