வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீர் செய்யும் அதிசயம்..!
கறிவேப்பிலை என்பது நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருளாகும். அப்படிப்பட்ட கறிவேப்பிலை நீரை குடிப்பதினால் உடலில் உண்டாகும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
கறிவேப்பிலை சுத்தம் செய்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் வடிக்கட்டி அந்த நீரை பருக வேண்டும்.
இதய ஆரோக்கியத்தை காக்கும்:
கறிவேப்பிலை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியம் தந்து இதயத்திற்கு நோய்கள் வராமல் காக்கிறது.
செரிமானம் மேம்படும்:
காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீரை குடிக்கும்போது அது உடலுக்கு சத்து நீராக செயல்பட்டு செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.
சருமம் சுத்தமாகும்:
கறிவேப்பிலையில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்டுகள் சருமத்தில் இருக்கும் பருக்கள், புள்ளிகள் மற்றும் பல்வேறு விதமான சரும பிரச்சனைகளை போக்குகிறது.
எடை குறையும்:
கறிவேப்பிலை நீரில் உடலின் எடையை குறைப்பதற்கான பண்புகள் இருப்பதால் உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
சர்க்கரை நோய்க்கு நல்லது:
கறிவேப்பிலைக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுகு இது சிறந்ததாகும்.
முடி வளர்ச்சி அடையும்:
கறிவேப்பிலையில் இருக்கும் இரும்புச்சத்து முடிக்கு நல்ல வலிமையை தந்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வயிற்று புண்ணை ஆற்றும்:
கறிவேப்பிலையில் இருக்கும் சக்தி வாய்ந்த தன்மையானது வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
நரையை போக்கும்:
கறிவேப்பிலை நீரில் இருக்கும் ஆற்றலானது முடியில் ஏற்படும் நரையை தடுக்க உதவுகிறது.
பாக்டீரியாவை எதிர்க்கும்:
கறிவேப்பிலையில் இருக்கும் பாக்டீரியா நீக்கும் சக்தியானது உடலில் இருக்கும் பாக்டீரியாவை நீக்குகிறது.
