பூக்கள் போல சருமம் மென்மையாக இருக்க சில டிப்ஸ்..!!
சருமத்தை என்றும் அழகாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்வதற்கு தேவதையான சில முக்கியமான இயற்கை குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
ரோஜாப் பூ : குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவிற்கு ரோஜா இதழ்களை ஊற வைத்து, அந்த தண்ணீரில் முகம் கழுவினால் மென்மையான சருமம் பெறலாம்.
மல்லிகைப் பூ : ஒரு கைப்பிடி அளவு மல்லியை எடுத்து நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இந்த நீரை ஒரு நாள் விட்டு, மறு நாள் இந்த நீரில் முகம் கழுவினால் சருமம் என்றும் பொலிவுடன் இருக்கும்.

சாமந்தி பூ : சாமந்திப் பூவை தண்ணீரில் போட்டு குளித்து வந்தால், முகப்பரு மற்றும் தழும்புகள் மறைந்து விடும்.
அல்லி பூ : அல்லிப் பூவை தண்ணீரில் ஊறவைத்து தலைக்கு குளித்து வந்தால், தலை அரிப்பு சரியாகிவிடும் மேலும் சருமத்திற்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கும்.
செம்பருத்தி : செம்பருத்தி பூவை அரைத்து தலைக்கு ஷாம்பூ வாக பயன் படுத்தினால், தலைமுடி கருகரு வென்று இருக்கும்.
தாமரை : தாமரையின் இதழ்களை அரைத்து முகத்தில் பூசினால் சுருக்கங்கள் விரைவில் வராது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post