கிரீன் டீயில் இவ்வளவு நன்மை இருக்கா..?
கிரீன் டீ நம்மிடையே இன்று மிகவும் பிரபலமாக உள்ள ஆரோக்கியமான டீ. சிலர் பால் டீ குடிப்பதை விட, கிரீன் டீயை தான் நாள்தோறும் குடித்து வருகின்றனர்.கிரீன் டீ குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்பது பலருக்கு தெரியும்.கிரீன் டீ குடிப்பதினால் பல நன்மைகள் உண்டு.
- காய்கறிகள் கீரைகளில் உள்ள சத்துக்களை விட கிரீன் டீயில் பல மடங்கு சத்துக்கள் உள்ளது.
- ஒரு ஆப்பிளுக்கு சமமானது ஒரு கப் கிரீன் டீ.
- இதய நோய் வராமல் தடுத்து இரத்தகுழாயின் அடிப்பை குறைக்கிறது.
- கிரீன் டீ உடலின் செல்களை புதுப்பித்து மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கிறது.
- கிரீன் டீ ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
- கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், தேவையற்ற கலோரிகளை அழித்து உடல் எடையை சீர் செய்கிறது.
- கிரீன் டீ உடலின் சோம்பலை போக்குகிறது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது
- கிரீன் டீ புற்றுநோய் செல்களை தடுக்கிறது.
- கிரீன் டீ எலும்புகளை பலப்படுத்தி, தாதுப்பொருட்களையும் கூட்டுகிறது.
- வாய் துர்நாற்றத்தை அழிக்கிறது.பல் சொத்தையை தடுக்கிறது.
- கிரீன் டீயை பருகினால் மனிதனின் ஞாபக சக்தி அதிகமாகிறது.
- சரும தோலையும் இளமையாக வைக்கிறது.பருக்களையும் தடுக்கிறது.
- கிரீன் டீ குடிப்பதினால் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராது.
- புண்கள் மற்றும் காயங்கள் விரைந்து குணமாக்குகிறது.மூட்டுவலியை தடுக்கிறது.
நாம் அனைவரும் நன்மைகள் அதிகம் உள்ள கிரீன் டீயை குடித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..