ஆரோக்கியத்தை அள்ளித் தரும் புளி..!
தமிழர்களின் சமையலில் பெரிதும் பயன்படுவது புளி. பெரும்பாலான உணவுகளில் புளி முக்கியத்தும் அளிக்கிறது. சமையலில் எப்படி புளி முக்கியமானதோ அதுபோல புளி ஆரோக்கியத்துக்கும் நன்மையளிக்கிறது.
சமையலில் ஒரு அங்கமாக திகழும் புளியை பற்றிய சில மருத்துவ குணங்களை பற்றி அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
புளி செரிமான செயல்பாட்டை தூண்டுவதற்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
புளியில் இருக்கும் கரோட்டின்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் பி ஆகியவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுபெற உதவியாக இருக்கிறது.
புளியில் இருக்கும் பொட்டாசியம் இதய துடிப்பை கட்டுப்படுத்தி திரவத்தை சமநிலையாக வைக்கிறது.
இதில் இருக்கும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் புளியில் இருக்கும் பாலிபினால்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
உணவு பொருட்களில் புளியை சேர்க்கும்போது அந்த உணவில் பூஞ்சை எதிர்ப்பு அதிகரிக்கிறது.
மேலும் புளி ஒரு கிளீனிங் செயலுக்கும் பயன்படுகிறது.
புளி சட்னிகள் முதல் அனைத்து வகையான பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.