ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான 5 டிப்ஸ்..!!
ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் சில தவறான உணவு முறைகளால் கேடும் விளைவிக்கிறது. இதை சரிசெய்ய சில உணவுகளை நாம் சேர்த்துக் கொண்டாலே போதும்.
பப்பாளி : பப்பாளி வாரத்திற்கு ஒரு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அமிலத்தன்மை இருப்பதால், இரத்த சோகை நோயை குணப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.
மாம்பழம் : வாரத்திற்கு மூன்று முறையாவது மாம்பழம் சாப்பிட வேண்டும். பீட்டா கரோட்டின் இதில் அதிகம் இருப்பதால் முகம் சுருங்காமல் என்றும் சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வெள்ளரிக்காய் : வாரத்தில் நான்கு முறையாவது பெண்கள் கட்டாயம் வெள்ளரி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் மார்பக புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. சருமம், மற்றும் கூந்தலையும் அழகாக வைத்துக்கொள்ளும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காய் ஜூஸ் எடுத்துக்கொண்டால், உடல் எடை குறைந்து விடும்.
தூதுவளை பூ : ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் தூதுவளை பூவை பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.
பலாப்பழம் : பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருப்பதால், மூளைக்கும் உடலுக்கும் சிறந்தது. அதிக சக்தி கொடுக்கிறது. மூளை நரம்புகள் வலுப்பெற உதவுகிறது. இதையும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் தவர்ப்பது நல்லது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post