நெஞ்சு சளி உடனே நீங்கணுமா.. ? இதை செய்து பாருங்க..!!
நம்மில் பலருக்கு அடிக்கடி உடம்பில் ஏற்படும் சளியால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி இருப்போம். அப்படி நாள்பட்ட சளிகளில் இருந்து உடனே விடுபட நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறைகளை நாமும் பின்பற்றுவோம். நம் உடல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வுகாண நம் சமையலறையை விட நல்ல மருத்துவமனை இருக்காது.
வீட்டில் உள்ள பொருட்களையே வைத்து பல நோய்களில் இருந்து விடைபெறலாம். அவற்றில் நெஞ்சு சளி குணமாக செய்ய வேண்டியவை பற்றி பார்க்கலாம். 5 வெற்றிலை, கற்பூரவள்ளி இலைகள், இஞ்சி, மிளகு, கிராம்பு, சீரகம்,
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வெற்றிலையையும், கற்பூரவள்ளி இலையும் பல துண்டுகளாக கிழித்து போட்டு கொதிக்க விட்டு பின்பு இஞ்சி, மிளகு, கிராம்பு, சீரகம், இவற்றை லேசாக நுணுக்கி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, தினமும் இரண்டு வேலை குடித்து வர, சளி சம்பந்தப்பட்ட அணைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
ஒவ்வொருவரும் அவர்கள் உடலுக்கு ஏற்றவாறு பொருட்களை சேர்த்து கொள்ளவும்.
ஆறு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..