ஆறு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..!!
குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று.., அதுவும் குழந்தை பிறந்ததில் இருந்து அவர்களின் தேவையை புரிந்துக்கொண்டு.. நாம் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது மிக முக்கியமான ஒன்று.. குழந்தைகளுக்கு தர வேண்டிய உணவு என்பது மிகவும் கவனமாக கொடுக்க வேண்டும்.
நாம் கொடுக்கும் உணவு அவர்களுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் இருக்க வேண்டும்.. ஒரு சில தவறான உணவு பழக்கம் அவர்களின் ஆரோக்யத்தை கெடுத்து விடும்..
அப்படி குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.
6 மாதத்தில் இருந்து 12 மாதம் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்.
தாய்ப்பால் குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மட்டுமின்றி தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறையாவது
தானியங்கள் :
தானிய பயிறு வகை உணவுகளை நன்கு வேக வைத்து மசித்து கொடுக்கலாம்.. தானிய பயிறு வகைகளை 45 கிராமிற்கு மேல் சேர்த்துகொள்ள தேவையில்லை.. இதனால் குழந்தைக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைக்கும்.
பருப்பு :
நன்கு வேக வைத்த பருப்பை மசித்து ஒரு பின்ச் அளவு உப்பு சேர்த்துக் கொடுக்கலாம். அல்லது வேக வைத்த பருப்பில் வடித்த சாதம் போட்டு சேர்த்து மசித்து ஊட்டலாம். இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும்.
பால் :
ஒரு வயது வரை தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும், ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைக்கு பசும்பால் நன்கு காய்ச்சி கொடுத்து பழகலாம். இதனால் குழந்தைக்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன்.., தாய்ப்பால் சுவையும் மறக்க தொடங்கி விடுவார்கள்.
கிழங்குகள் :
நன்கு வேக வைத்த கிழங்கில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குழந்தை களுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைக்கு தேவையான.. அனைத்து மாவுச்சத்துக்களும் கிடைக்கும்..
கீரைகள் :
ஒரு வயது குழந்தைக்கு மட்டும் கீரையை சூப்பாக சமைத்து கொடுக்கலாம். ஆறு மாதத்தில் இருந்து ஒரு வயது வரை இருக்கும் குழந்தைக்கு தற்போது கொடுக்காமல் இருப்பது சிறந்தது.. அப்படி கொடுக்க நினைத்தால்.. மருத்துவர்கள் ஆலோசனை படி கொடுக்கலாம்..
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..