சர்கார் பட பாணியில் நடந்த வாக்கு..!! பரபரப்பான அந்த மாவட்டம்..!!
நிஜவாழ்க்கையில் நடப்பதை தான் முன்னெல்லாம் நாடகமாகவும் படமாகவும் எடுப்பார்கள்.., ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் வருவது நிஜ வாழ்க்கையில் நடக்கிறது.., அப்படி ஒரு சம்பவம் தான் இந்த மாவட்டத்திலும் நடந்துள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி கோனாமேடு நகராட்சி தொடக்கப் பள்ளி பூத் எண் 103 ல் இன்று புத்தர் நகர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வாக்களிக்க வந்த நிலையில் அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்தியுள்ளதால் தன்னுடைய வாக்கை தான் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுடன் கேட்டு வாக்கு செலுத்தும் மையத்தில் வாக்காளர் ஒருவர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரம் தனது வாக்கினை கூறி வாக்காளர் அரவிந்த் காத்திருந்த நிலை ஏற்பட்டதால்பிற கட்சி நிர்வாகிகள் இதன் மீது பிரச்சனை எழுப்பி வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் தாமரைச்சினத்திற்கு செல்வதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சமாதானம் செய்ய முயன்று வேறு வழியில்லாமல் நீண்ட நேரம் காத்திருந்து அவரை பூத் அலுவலர் அழைத்துச் சென்று அவருடைய வாக்கு மற்றொரு நபர் பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டு வாக்காளர் தன்னுடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்தியது ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து வாக்காளருக்கு டெண்டர் ஓட் அளிக்க போலிங் ஆபிசர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் அதற்காக பிரத்யோகமாக இருந்த காகிதத்தில் அச்சிடப்பட்டிருந்த வாக்குச் சீட்டில் வாக்கினை செலுத்தினார்.
இதனால் கோணமேடு பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
காலையில் இருந்து மாலை வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை சதவிகிதம் வாக்குபதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு தொகுதி என்று எடுத்துக்கொண்டால் 20 சதவிகதம் மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லாததால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில முக்கிய துறைகளில் அதாவது.., மருத்துவம், காவல் மற்றும் ஊடக துறையில் வேலைப்பார்க்கும் நபர்களால் சரியான நேரத்திற்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் வாக்கு செலுத்த முடியவில்லை என்றும்.., இதற்கு தமிழக அரசு எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..