காலை உணவு.. சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் ரெசிபி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
- 250 கிராம் காளான்
- 200 கிராம் சேமியா
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 2 பெரிய வெங்காயம்
- சிறிதளவு இஞ்சி
- சிறிதளவு பூண்டு
- தேவையான அளவு உப்பு
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா
செய்முறை:
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.
- தண்ணீர் கொதி வந்ததும் அதில் சேமியாவை சேர்த்து பாதியளவு வேகவைக்கவும்.
- பின் சேமியாவை வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசிக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் சேர்த்து தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- அதனுடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும் பின் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- அடுத்ததாக மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- ஒரு வாழை இலையை எடுத்து ஓரளவிற்கு சிறியதாக தனித்தனியே வெட்டிக் கொள்ள வேண்டும்.
- முதலில் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு வாழை இலையில் சிறிது சேமியாவை எடுத்து வைத்து அதன் நடுவில் வதக்கிய காளான் மசாலாவை சிரிது எடுத்து வைத்து வாழை இலையை அப்படியே மடக்கி மூடி வைக்கவும்.
- ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.
- இட்லி தட்டில் தயாரித்த வாழை இலைகளை வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
- பின் வாழை இலையை எடுத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறலாம்.
- அப்படியே வாழை இலையை பிரித்து சேமியாவுடன் மசாலா சேர்த்து சாப்பிட நல்லா வாழை இலை மணத்துடன் சூப்பராக இருக்கும். ட்ரைப் பண்ணி பாருங்க.
