டிஜிட்டல் உலகை மறந்து வேலையை காட்டிய பெண்கள்..!! போலீஸ் ஸ்டேஷனின் குறும்படம்..!!
மயிலாடுதுறையில் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அடையாளம் கண்டறிந்து மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ் (55) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இரண்டு இளம்பெண்கள் தாலிச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகளை வாங்குவதை போல சென்று அதை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துள்ளனர்.. அப்போது பக்கத்தில் இருந்த மற்றொரு பெண் இந்த நகையில் வேறு டிசைன் வேண்டுமென்று கேட்டதால், உரிமையாளர் ரமேஷ் உள்ளே சென்று எடுத்து வந்து புது டிசைன்களை காட்டிய போது டிசைன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
பின்னர், நகைகளை பார்த்தபோது, அந்த இளம்பெண் பார்த்து கொண்டிருந்த டிசைனில் இருந்த சில நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. அதையடுத்து உரிமையாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸார் சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து நகையை திருடி சென்ற ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்த இவாஞ்சலின் (வயது 23 ) மற்றும் மல்லிகா (வயது 35) என்பது தெரியவந்தது..
பின் அவர்கள் இருவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போது., நாங்கள் திருடவே இல்லை என அந்த இரு பெண்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர், அப்போது அந்த பெண்கள் கடையில் திருடும் போது பதிவான சிசிடிவி காட்சிகளை குறும்படமாக அந்த பெண்களுக்கே போட்டு காட்ட அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அதன் பின் அவர்கள் இருவரையும் கைது செய்து அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..