சாதம் குழைந்துவிட்டால் இதை செய்ங்க..! சூப்பர் டிப்ஸ்..!
காலிஃபிளவரை உப்பு கலந்த சூடான நீரில் சிறிது நேரம் போட்டுவைத்தால் அதில் இருக்கும் புழுக்கள் அழிந்துவிடும்.
புதினா இலைகலை வாங்கி காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு சமையலில் வாசனைக்காக பயன்படுத்தலாம்.
அடை மாவு மீந்துபோய்விட்டால் அதில் சிறிது ரவை கலந்து கொஞ்ச நேரத்திற்கு வைத்திருந்து பின் போண்டா போல எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் நறுக்கியதும் நிறம் மாறும் அதை தடுக்க உப்பு கலந்த நீரில் முக்கி எடுக்க வேண்டும்.
இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க அவற்றை லேசாக வேகவைக்க வேண்டும்.
பாயாசத்திற்கு முந்திரி இல்லையா? கவலையை விடுங்க, முற்றிய தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து பாயாசத்தில் போடலாம்.
முறுக்கு மாவில் நன்றாக பழுத்த ஒரு வாழைப்பழத்தை பிழிந்து சேர்த்து பிசைந்து முறுக்கு சுட்டு பாருங்க.
ரோஜா இதழ்களை உலர்த்தி டீத்தூளுடன் சேர்த்து டீ போட்டால் சுவை அருமையாக இருக்கும்.
சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டால் அதில் உருளைக்கிழங்கை நறுக்கி சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின் எடுத்தால் உப்பு குறைந்துவிடும்.
சாதம் குழைந்துபோய்விட்டால் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட்டு பின் வடித்தால் பூப்போல இருக்கும்.
பெரிய வகை காராமணியை ஊறவைக்க தேவையில்லை அதை கழுவி அப்படியே குக்கரில் போட்டால் வெந்துவிடும்.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும் சமையத்தில் அரை ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்தால் நெய் நல்லா வாசனையாக இருக்கும்.
பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும் அதை தடுக்க இரண்டாக நறுக்கி வைக்கலாம்.