உலக விளையாட்டு வீரர்களில் ஆண்டுக்கு 2,356 கோடி வருவாயுடன் ரொனால்டோ 5வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனொல்டோவுக்கு தற்போது 40 வயதாகிறது. தற்போது, சவுதி அரேபியாவின் அல் நாஸர் அணிக்காக விளையாடி வருகிறால். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் ரொனால்டோ 2,356 கோடி சம்பாதித்துள்ளார். அல்நாஸர் அணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்தும் நைக், ஹெர்பல் லைஃப் போன்ற பெரிய நிறுவனங்களுடனான விளம்பர ஒப்பந்தங்களில் இருந்தும் அவருக்கு வருவாய் கிடைக்கிறது.
இதற்கிடையே, ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜுனியர் 15 வயதுக்குட்பட்ட போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கியுள்ளார். குரோஷியாவில் நடந்து வரும் சிறார் சர்வசே கால்பந்து தொடரில் ஜப்பான் அணிக்கு எதிராக முதன்முறையாக சர்வதேச ஆட்டத்தில் அவர் களம் இறங்கியுள்ளார்.
ரொனால்டோவின் மகனுக்கு தற்போது 14 வயதாகிறது.