தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு இன்று (மே 16) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TN Govt employees to get 4 month DA
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். TN Govt employees to get 4 month DA
அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 01/01/2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசு ஊழியர்களுக்கும் 01/01/2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தமிழக அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத (Jan – April 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.