பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது. போர் சமயத்தில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தன.
இந்தியாவின் இராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைக்க துருக்கிய சோங்கர் ட்ரோன்களும் பாகிஸ்தான் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது துருக்கியை புறக்கணிக்க இந்திய வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு 5 கோடி இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்தனர்.
தற்போது, இந்திய சுற்றுலாப்பயணிகள் துருக்கியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், துருக்கி ஆடிப் போய் உள்ளது. உலகின் அழகான 20 நாடுகளில் துருக்கியும் ஒன்று. இதனால், இந்தியர்கள் இந்த நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்று வந்தனர்.தற்போது, இந்திய சுற்றுலாப்பயணிகள் துருக்கியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதால், அந்த நாடு கதற தொடங்கியுள்ளது. இந்தியர்கள் தங்கள் நாட்டை புறக்கணிக்க வேண்டொமென்று அந்த நாட்டு சுற்றுலாத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது, தொடர்பாக ட்விட்டரில் அந்த நாட்டு சுற்றுலாத்துறை கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதே போல, அசர்பைஜான் நாட்டையும் இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 3.3 லட்சம் இந்தியர்கள் துருக்கிக்கு சென்றுள்ளனர். அசர்பைஜான் நாட்டுக்கு 2.43 லட்சம் பேர் சென்றிருக்கின்றனர். இந்த நாடுகளில் இந்தியர்கள் 3 ஆயிரம் கோடி பணம் செலவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, சிந்து நதி ஓட்டத்தை நிறுத்த வேண்டாமென்று பாகிஸ்தான் கோரியுள்ளது. நீர் தட்டுப்பாடு காரணமாக அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக திரும்ப தொடங்கியுள்ளனர். ஆங்காங்கே , போராட்டம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.