ஐ.பி.எல் தொடரில் குவாலிபையர் 1 ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐ.பி.எல் இறுதி ஆட்டத்துக்கு ஆர்.சி.பி அணி முன்னேறியுள்ளது. இதற்கு, முன்னதாக 2009,2011,2016ம் ஆண்டுகளில் ஆர்.சி.பி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
கடந்த 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடமும் 2011ம் ஆண்டு சென்னை அணியிடம் தோற்றிருந்தது. 2016ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையில் ஹைதராபாத் அணியை ஆர்.சி.பி எதிர்கொண்டது. அப்போது, 8 ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை நழுவவிட்டது. இதையடுத்தே, கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
குவாலிபையர் 2 ஆட்டத்தில இன்று (மே 30) லக்னோ அணியுடன் மும்பை மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணியுடன் பஞ்சாப் அணி வரும் 1ம் தேதி மோதும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஆர்.சி.பி அணியுடன் ஜூன் 3ம் தேதி இறுதி போட்டியில் விளையாடும். இறுதி ஆட்டம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஐ.பி.எல் கோப்பையை விராட் கோலி வெல்வாரா? என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.