ஐ.பி.எல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதையடுத்து, நடந்த வெற்றி ஊர்வலத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.இறந்தவர்களில் பாமிக் லட்சுமணன் என்ற 21 வயது இளைஞரும் உண்டு.
இவரது, தந்தை பி.டி. லட்சுமணணால் மகனின் இறப்பை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மகனுக்காக இவர் , வாங்கிய இடத்திலேயே அவரின் சடலத்தை அடக்கம் செய்துள்ளார். அடக்கம் செய்த இடத்திலேயே படுத்தும் கிடக்கிறார். இவரை, யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.
முன்னதாக, பாமிக் லட்சுமணன், எனது மகனின் உடலை துண்டு துண்டாக்கி போஸ்ட் மார்ட்டம் செய்யாதீர்கள். அவரின் சடலத்தை அப்படியே என்னிடத்தில் கொடுத்து விடுங்கள். முதலமைச்சர், துணை முதல்வர் இப்போது வரலாம். ஆனால், எனது மகன் திரும்ப கிடைப்பானா? என்று கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.
என்ஜீனியரிங் 4ம் ஆண்டு பாமிக் லட்சுமணன் படித்து கொண்டிருந்தார். தனது ஒரே மகனை இழந்தால், பி.டி. லட்சுமணதால், இந்த சோகத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட நிலை எந்த தந்தைக்கும் வரக் கூடாது என்று அவர் புலம்பிக் கொண்டே இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.