காளான் மிளகு வறுவல் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
காளான் 250 கிராம்
சின்ன வெங்காயம் 50 கிராம்
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
மிளகுத்தூள் 11/2 ஸ்பூன்
தாளிப்பதற்கு:
கடுகு அரை ஸ்பூன்
உளுத்து அரை ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் தேவையானது
செய்முறை:
காளானை சுத்தம் செய்து சூடான நீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை சேர்த்து தாளித்து பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து பின் அதில் காளானை சேர்த்து வதக்கி சிறிது நீர் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் காளான் மிளகு வறுவல் தயார்.