ஒரே நாளில் 2 இடத்தில் ஸ்கெட்ச் போட்டு திருடிய கொள்ளையர்கள்.!! போலீசில் சிக்கியது எப்படி..?
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மருசூர் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வீட்டின் வாசற்படியில் உறங்கி கொண்டி இருந்த வயதான மூதாட்டியின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கசங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.. இதுகண்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி கூச்சலிட்டுள்ளார்.. ஆனால் அதற்குள் அந்த திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.. பின் மறுநாள் காலை இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..
புகாரை ஏற்ற காவலர்கள்.., நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.. ஆனால் அன்று இரவு தச்சூர் கிராமத்தில் உள்ள முருகேசன் என்பவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகளை ஒரு கும்பல் திருடிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார்தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்றுஆரணி – சேத்துப்பட்டு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்குரிய வகையில்வந்த மூன்று நபர்களை போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் புறம்பாக பேசியுள்ளனர். அவர்கள் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது தஞ்சாவூர் மாவட்டம் திருவள்ளுவர் நகர் ராமநாதபுரம் வட்டம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரகுபிரசாத் மற்றும் பாண்டுரங்கன் என்பதும் மூதாட்டி முருகேசன் வீட்டில் நகைகளை திருடியவர்கள் இவர்கள் தான் என்பதும் தெரிய வந்தது.
பின் மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 19 சவரன் நகைகளையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..