ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நச்சுனு அஞ்சு டிப்ஸ் – 18
உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கு பிரியர்கள் இங்கு ஏராளம். வாரத்திற்கு மூன்று முறையாவது சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறு நீங்கும். உருளைக்கிழங்கு வாய்வு என்று சொல்லுவார்கள். உருளையின் தோலை நீக்கி விட்டு சமைத்தால் மட்டும் தான் வாய்ப்பு பிரச்சனை ஏற்படும்.
சுண்டக்காய் : கசப்பு நிறைந்த பொருள் என்பதால் இதை பலரும் உணவில் இருந்து ஒதுக்கிவிடுகிறார்கள், அது தவறு , சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நச்சு கிருமிகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது.
வாழைக்காய் : வாழைக்காயை வாரத்திற்கு மூன்று முறை, சாப்பிட்டு வந்தால் உடலின் ரத்த இன்சுலின் ஹார்மோன் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும். மேலும் ரத்தத்தின் குளுகோஸின் அளவை கட்டு படுத்தும்.
கொத்தவரங்காய் : கொத்தவரங்காய் உடலில் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ரத்தத்தை சீராக்கி நச்சுக்களை வெளியேற்றி விடும்.
அரைகீரை : வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும். மஞ்சள் காமாலை தாக்கப்பட்டவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு உணவு.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.