குழந்தை பெற்ற பின் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
குழந்தை பெற்ற பல பெண்களுக்கு மனதில் ஏற்படும் சந்தேகம் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால், உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். மற்றும் குழந்தைக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும் என்று. எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொண்டால் இருவருக்கும் ஆரோக்கியம் தறும்.
கொள்ளு : குழந்தை பெற்ற பெண்களுக்கு மூன்று மாதங்கள் கழித்து கொள்ளு சாம்பார் அல்லது கொள்ளு ரசம் வைத்துக் கொடுத்தால், கருப்பப்பையில் இருக்கும் அழுக்கு நீங்கி விடும். பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் பெருக்கமும் குறைந்து விடும்.
ஓட்ஸ் : ஓட்ஸ் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு தாய்ப்பால் சுரக்கவும் உதவும். ஓட்ஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவும். மசாலா ஓட்ஸ் குழந்தைக்கு 8 மாதம் ஆன பிறகு எடுத்துக்கொள்ளலாம்.
பப்பாளி காய் : பப்பாளி காயை வேக வைத்து, பொரியல் செய்து சாப்பிட்டால் ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் தாய்ப்பால் சுரக்கவும் உதவும்.
மேலும் இதுபோன்ற பல, பெண்கள் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.