மஞ்சளின் மருத்துவகுணம்..!!
மஞ்சள் வைத்து சமைக்காத உணவு பொருளே கிடையாது.. சமையல் முதல் மருத்துவம் வரை மஞ்சள் முக்கியத்துவம் அளிக்கிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், காயப்பட்ட இடங்களுக்கு மருந்தாகவும் மஞ்சள் முக்கியத்துவம் அளிக்கிறது. உடலுக்கு தேவையான ஆக்சிஜனேற்றங்களையும் மஞ்சள் அளிக்கிறது.
மஞ்சளில் குர்குமின் எனப்படும் மூலப்பொருள் இருப்பதால், மசாலாவுக்கு சக்தி வாய்ந்த பண்புகளை கொடுக்கிறது. மஞ்சளை நாம் சமைக்கும் அசைவம், சைவம், பால் என அனைத்து உணவுகளிலும் சேர்த்துக்கொள்ள முடியும்.
இது தசைவலி மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும்.
மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்..
அழற்சி :
மஞ்சளில் இருக்கும் குர்குமின் உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராடுவதுடன், அழற்சி தன்மை ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
மஞ்சளில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலை வலுவடையவும் செய்கிறது.
மூளை :
மஞ்சள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளைக்கு நியாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்,
இதயம் :
மஞ்சளில் உள்ள குர்குமின் இதயத்திற்கு ஆரோக்கியம் கொடுப்பதோடு.. ரத்த ஓட்டத்திற்கும் உதவும்.
ஆக்சிஜனேற்றம் :
குர்குமினில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் ஆக்சிஜனேற்ற அழுத்த பண்புகளை எதிர்த்து போராடுவதுடன். உடலுக்கு தேவையான ஆக்சிஜனேற்றத்தை அளிக்கிறது.
தண்ணீர் :
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் தண்ணீரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் வயிற்றுள்ள அழுக்குகளை மலம் வழியே வெளியேற்றி விடும்.
மேற்கண்ட குறிப்பு பிரபல ஆரோக்கிய மருத்துவர்களிடம் கேட்டு குறிப்பிட பட்டவையே.. எனவே பயப்படாமல் இந்த குறிப்புகளை பயன் படுத்தலாம்.., இயற்கை முறை ஆரோக்கிய குறிப்புகள் விரும்பாதவர்கள் மாத்திரை மருந்துகளை பயன் படித்திக்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post