வகுப்பறையில் கலாட்டா செய்த மாணவனை கண்டித்த ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவனின் உறவினர்கள்..!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு திடீர் நகரை சேர்ந்த சுரேஷ் பாபு மற்றும் செவ்வந்தியின் மகன் ஹரிஹரன் குருவராஜா கண்டிகை அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன் தினம் திங்கட்கிழமை மதியம் வகுப்பு ஆசிரியர் வராததால்.., அவருக்கு பதிலாக மோகன் பாபு என்ற ஆசிரியர் வந்து பாடம் எடுத்துள்ளார்.
அப்பொழுது ஹரிஹரன் பாடம் கவனிக்காமல் விளையாடியுள்ளான்.., அதற்கு ஆசிரியர் கண்டித்துள்ளார். அதற்கும் ஹரிஹரன் அசராமல் ஆசிரியரை கேளி செய்துள்ளான். அதற்கு ஆசிரியர் ஹரிஹரனை மீண்டும் கண்டித்துள்ளார்.
அதற்கு அசராத ஹரிஹரன் ஆசிரியரை தகாத வார்த்தைகளில் பேசி மற்ற மாணவர்கள் முன் ஆபாசமாக திட்டி உள்ளான். அதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். அவர் அடித்ததில் மாணவனின் கை வீங்கியுள்ளது.
வகுப்பு முடிந்தது ஹரிஹரன் வீட்டிற்கு செல்லாமல் பள்ளியிலேயே இருந்து.., இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளான். கரணம் குறித்து பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் தான் தன்னை தாக்கி ஆபாசமாக பேசி காலில் விழ வைத்துள்ளார் என கூறியுள்ளான்.
அவனின் பேச்சை கேட்டு பெற்றோர் சுற்றி இருக்கும் உறவினர்களுடம் நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியரை தாக்கி செருப்பால் அடித்து உதைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார்.., மற்ற மாணவர்களிடம் விசாரணை மேற் கொண்டதில் மாணவன் மீது தவறு இருந்தது தெரிய வந்தது.., மாணவனை திருத்துவதற்காக கண்டித்த ஆசிரியரை செருப்பால் அடித்த குற்றத்திற்காக.., அந்த ஆவேச கும்பலை காவல் நிலையம் கூட்டி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை ஆசிரியரை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக மாணவனை.., பள்ளி நிர்வாகம் இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post