காலை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள்…!
இப்போதுள்ள காலக்கட்டத்தில் பெரும்பானோர் காலை உணவினை எடுத்துக்கொள்வதில்லை. இது மிகவும் தவறு, காலை உணவானது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று, இதை சாப்பிடாமல் விட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆற்றல் கிடைக்காது. இதனால் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்ப்படும், உடல் சோர்வு அடையும்.அப்படி உடலுக்கு வலுவூட்டும் விதமாக கீழே சிலவகை உணவுப் பொருட்களை குறிப்பிட்டுள்ளோம். இதனை கட்டாயம் உங்கள் காலை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
ப்ரோக்கோலி: உடம்பில் குடல் இயக்கம் சீராக நடைபெற புரோக்கோலி சாப்பிட வேண்டும், காரணம் புரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் இருக்கிறது.
புரோக்கோலி செரிமான பாதையை சரிசெய்கிறது, எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதயத்தை பாதுகாக்கிறது.
ஆப்பிள்: நார்ச்சத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஆப்பிளில் அதிகமாக இருக்கிறது. குடலுக்கு உகந்த்து.செரிமானத்தை சீராக்குகிறது.
பீட்ரூட்: பீட்ரூட்டிலும் அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இதனால் குடலை சுத்திகரித்து பாதுகாக்கிறது.
வாழைப்பழம்: இதில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது, எனவே இது செரிமானத்தை சீராக்குகிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: காலை உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்துக்கொள்வது செரிமானம் சீக்கிரம் நடைபெற உதவுகிறது. ஊட்டச்சத்துகளை உறிஞ்ச உதவுகிறது.
பப்பாளி: பப்பாளி செரிமானத்திற்கு உதவுகிறது. பப்பாளி ஜூஸ் பருகினால் மலச்சிக்கல், வீக்கம், நெஞ்செரிச்சல் ஆகியவற்றை தடுக்கிறது.
