இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க உணவுகள்..!
ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பு அணுக்களில் இருக்கும் புரோட்டீன் அளவாகும். இது உடலின் உறுப்புகளில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி அவற்றிலிருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை நுரையீரலுக்கு செலுத்துகிறது.
உங்களுடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
இதற்கு ரத்த சோகை என்று பெயர். ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு சில உணவுப்பொருட்களை சாப்பிடலாம். அவற்றை என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது கட்டாயம் இந்தவகை உணவுகளை சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- சுண்டைக்காய்
- முருங்கைக்கீரை
- பீட்ரூட்
- எள்ளுருண்டை
- பாசிப்பயறு
- மணத்தக்காளி வத்தல்
- விதையுள்ள கருப்பு திராட்சை
- அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை
- நாட்டு மாதுளை
- நாட்டு பேரீச்சை
- பீர்க்கங்காய்
- கறிவேப்பிலை துவையல்
- முள்ளங்கி
- பிரண்டை
- பனை வெல்லம் உளுந்துகளி
- கேழ்வரகு தோசை
- பொன்னாங்கன்னி கீரை
- தண்டுக்கீரை
- ஈரல்
- வெள்ளாட்டுக்கறி
- எலும்பு சூப்
- சிறுதானிய மாவுருண்டை
- நெல்லிக்காய் சாறு
