திடீர் மோர் வேண்டுமா..? அப்போ இதோ சூப்பர் ஐடியா..!
முட்டைகோஸ் வேகவைக்கும்போது அதில் வரும் நாற்றத்தை தடுக்க அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து வேகவைத்தால் வாசனை கமகமக்கும்.
விருந்தாளிகள் திடீர்னு வந்துவிட்டால் மோர் குறைவாக இருக்கும்போது லேசாக சூடாக இருந்த பாலில் 1 எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு சேர்த்து கலந்து ஆற்றினால் நல்லா அருமையான மோர் தயார்.
நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெயில் காரல் வாசனை வராமல் இருக்க அதில் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.
காய்கறிகளை வேகவைக்கும்போது அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும், அப்படியானால் தண்ணீர் சுண்டிவிடும் காய்கறிகளின் சத்துகள் வெளியே போகாது.
அரிசியை வெறும் வாணலில் சிறிது நேரம் வறுத்து பின் ஊறவைத்து அரைத்து இட்லி சுட்டால் இட்லி மென்மையாக இருக்கும்.
அடைக்கு மாவு அரைக்கும்போது காய்ந்த மிளகாய் போட்டு அரைத்து பின் நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்தால் மாவு வாசனையாக இருக்கும்.
கோதுமையை லேசாக வறுத்து பின் அரைத்தால் மாவு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
காரமான பண்டங்களை தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெயில் சுட்டால் ருசியாகவும் நீண்ட நாட்களுக்கு கெடாமலும் இருக்கும்.