ராணுவ வீரர்களுடன் விஜய்…!! வைரலாகும் க்ளிக்ஸ்…!!
நடிகர் விஜய் தற்போது 69 வது படத்தில் நடித்து வருகிறார். அரசியல் குறித்த பணிகளிலும் தீவிரமடைந்து வருகிறார். இதற்காக சென்னை பனையூரில் உள்ள அனைத்து கட்சி அலுவலகத்தில் அடிக்கடி நிர்வாகிகளை சந்திக்க ஆலோசனை நடத்தி வருகிறார்.
தளபதி விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையில்., கேவிஎன் புரொடெக்ஷன் தயாரிப்பில் வெங்கட் நாராயணா படத்தை தயாரிக்கிறார்.
அரசியலில் கால் பதித்துள்ள தளபதி விஜய்., முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் தளபதி 69 அவரின் கடைசி படம் என்பதால் மக்கள் மனதில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது..
அதோடு கட்சிகள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பூத் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளிலும் அவர் கடும் தீவிரம் அடைந்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னை பரங்கிமலை உள்ள ராணுவ அதிகாரிகளின் பயிற்சி பள்ளிக்கு சென்று கலந்துரையாடி இருக்கிறார் விஜய்.
அப்போது ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் அவரை சந்தித்துள்ளார்கள். இப்படி ராணுவ வீரர்களுடன் விஜய் சந்திப்பு நடத்திய புகைப்படம் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது…