ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அஞ்சு டிப்ஸ் ; குறிப்பு -21
ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் சில தவறான உணவு பழக்கத்தால், உடலுக்கு கெடுதல் அளிக்கிறது. எனவே நாம் சாப்பிடும் உணவில் இதையும் சேர்த்துக்கொண்டால், உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
தேன் : ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ரத்ததை உற்பத்தி செய்யும், நாள் முழுவதும் உடல் சோர்வு ஏற்படாது. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும்.
அருகம்புல் ஜூஸ் : அருகம்புல்லில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
தினமும் காலை அருகம்புல் ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். விஷக்கடிக்கு ஏற்ற ஒரு மருந்தாகவும் அருகம்புல் விளங்கும். வயல் வேலியில் பூச்சிக்கொல்லி அடிக்காத அருகம்புல்லை பயன் படுத்துவது சிறந்தது.
ராகி கூல் : ராகி கூல் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடம்பில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்தை அதிகரிக்கச்செய்யும். இனிப்பு சேர்த்து காய்ச்சும் ராகி கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எலும்புகள் வலுவு பெரும். சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
முருங்கைகீரை : வாரத்திற்கு இருமுறை முருங்கைகீரை எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கச்செய்யும். சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு உணவு, இதில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் மற்றும் தாதுஉப்புகள் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.
பார்லி : பார்லியை அரைத்து மாவாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் வைத்து அதில் 2ஸ்பூன் பார்லி மாவை கலந்து 4 விசில் வரும் வரை சூடேற்ற வேண்டும்.
இளஞ்சூடாக வந்த பின் சர்க்கரை சேர்த்துக் குடித்து வந்தால், உடல் சூட்டை தணிக்கும். சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..