சோம்நாத்தை கஜினி முகமது கைப்பற்றியது ஏன்..?
பார்த்ததில் பிடித்தது என்று சொல்லுவதா இல்லை.., சிரித்தேன் என்று சொல்லவா.. இல்லை இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும் என சொல்லுவதா என தெரியவில்லை.
அது ஏன் என சொல்லுகிறேன் நீங்களும் பாருங்க . கஜினி முகமது 17 முறை படை எடுத்து வந்து, சோமநாதர் கோயிலை இடிச்சதை, விடாமுயற்சின்னு சொல்லிப் பாடம் நடத்துறீங்களே..? 17 முறையும் அந்தக் கொள்ளைக்காரனைத் தோற்கடித்து அனுப்பிய இந்திய மன்னர்கள் யார் என்று பாடம் சொல்லிக் கொடுங்க…
இப்படி ஒரு கூமுட்டைப் பதிவு பார்த்தேன்.
கஜினி முகமது இந்திய நிலத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை. கோவில்களில் இருந்த தங்கத்தைக் கொள்ளை அடிப்படிதற்காக தான் வந்தான். அப்போது நடந்த சண்டையில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு முறையும் நிறைய நிறைய அள்ளிச் சென்றான். சோமநாதர் கோவிலில் தான் பெரிய வேட்டை கிடைத்தது. அவனை எந்த இந்து மன்னரும் தடுக்கவும் முடியவில்லை… தோற்கடிக்கவும் முடியவில்லை.
அப்படி இருந்தால், அந்த சோமநாதர் கல் பொம்மைக்குக் கூட, கஜினி முகமதுவைத் தடுக்கும் ஆற்றல் இல்லையா என்ன. குஜராத்தின் சோலங்கி அரசர்களுக்கு அது பிரச்னையான காலம். அந்த நேரத்தில், அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குர்ஜார் ராஜ்ஜியத்தின் மதத் தலைநகராக சோம்நாத் கருதப்பட்டது.
சௌராஷ்டிரா கடற்கரையில் உள்ள சோமநாதர் கோவிலின் காரணமாக இப்பகுதி அவ்வாறு திகழ்ந்ததாக கருதப்படுகிறது. சௌராஷ்டிரா கடற்கரையில் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் சுவர்கள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. இந்த ஆலயம் பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 56 தூண்களுக்கு மேலே இந்த கோவிலின் மேற்கூரை கட்டப்பட்டுள்ளது.
சோம்நாத்தைக் கைப்பற்றிய முகமது :
கஜினியிலிருந்து சோம்நாத் வரையிலான தூரத்தை அதிக தடையின்றி கடந்தார் முகமது. பயணத்தில் முகமது சந்தித்த சூழ்நிலைகளை ‘பிரபாஸ் யானே சோம்நாத்’ புத்தகத்தில் விளக்கியுள்ளார் சம்புபிரசாத் தேசாய்.
மாளவபதி முஞ்ச், போஜ் பர்மர், சேதிராஜா கர்ணன், சிந்து அரசர்களுடன் போரிட்டவர் அன்ஹில்வாட் பட்டான் சாம்ராஜ்யத்தின் அரசர் பீம் தேவ். முகமதுவின் பெரும் படையைக் கண்டு பயந்தார் அவர். பீம்தேவ் கட்ச் நோக்கிச் சென்றது முகமதுவுக்கு சாதகமாக அமைந்தது. மொதேராவை அடைந்ததும், முகமது தனது முதல் பெரிய சவாலை எதிர்கொண்டார்.
20 ஆயிரம் வீரர்கள் மோதேராவில் சுல்தானின் படைகளைத் தாக்கினர். சுல்தான் போரில் வெற்றி பெற்றதாக டாக்டர் நாஜிம் “தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் சுல்தான் முஹம்மது ஆஃப் கஸ்னா”. (The Life and Times of Sultan Muhammad of Gazna) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அரேபிய வரலாற்றாசிரியர் அல்-இபின் அல்-ஆதிரையின் குறிப்பை மேற்கோள் காட்டி சம்புபிரசாத் தேசாய் பின்வருமாறு எழுதுகிறார், “ஒரு தளபதி இல்லாமலே ராணுவ வீரர்கள் முகமதுவுடன் போரிட்டனர்”.
மொதேரா போரும் முடிவடைந்ததால், சோம்நாத்தின் மீது படையெடுப்பது முகமதுவுக்கு எளிதாகிவிட்டது. ‘பிரபாஸ்-சோம்நாத்’ புத்தகத்தின்படி, “சோம்நாத் மிகவும் சக்திவாய்ந்தவர், தங்களை அந்நியர்களிடமிருந்து காப்பாற்றி எதிரிகளை அழிப்பார் என்று மக்கள் நம்பினார்கள்”.
– வெ.லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..