நோயற்ற வாழ்க்கைக்கு தேவையான அஞ்சு டிப்ஸ்..!!
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது..? ஆனால் சில தவறான உணவு பழக்கத்தால் நம் உடல் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு சில உணவுகளை, சேர்த்துக் கொண்டாலே போதும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான அஞ்சு டிப்ஸ்..!!
வாழைக்காய் : வாரத்தில் இருமுறை வாழைக்காய் எடுத்துக்கொண்டால், பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும்.
உலர் திராட்சை : தினமும் காலை வெறும் வயிற்றில் 4 உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், மார்பு சளி குணமாகும்.
மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி விடும். ரத்த சோகை நோயை குணப்படுத்தும்.
உடல் குளிர்ச்சி : வெயில் காலத்தில் உடலில் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள 300 கிராம் கொத்தமல்லி, புதினா மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து ஐஸ் கட்டி போட்டுக் குடித்தால். வயிற்று போக்கு ஆகவிடாமல் தடுக்கும்.
தேங்காய் பால் : உணவிலோ அல்லது காலை வெறும் வயிற்றிலோ தேங்காய் பால் எடுத்துக்கொண்டால், மலசிக்கல் குணமாகும்.
மற்றும் வயிற்று புண்களை ஆற்றி விடும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் : சிறிதளவு மஞ்சளை வெந்நீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை எடுத்து வாய் கொப்பிளித்தால் தொண்டை புண்கள் ஆறும். மேலும் சளியை வெளியேற்றி விடும்.
மேலும் இது போன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..