ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான அஞ்சு டிப்ஸ்..!!
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரு சில தவறான உணவு பழக்கம் நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.
ஆனால் ஒரு சில உணவுகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அதில் ஒரு சிலவற்றை பார்க்கலாம்.
சின்ன வெங்காயம் : தினமும் காலை ஒரு 5 சின்ன வெங்காயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் வெங்காயம் எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள், பழைய சோறுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் வெயில் காலத்தில் ஏற்படும் நோய்கள் எதிர்த்து போராடும்.
காராமணி : காராமணியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

கொள்ளு : தினமும் காலை கொள்ளு பயிரை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

பச்சை பயிறு : பச்சை பயிறு உடல் தசைகளை வலுவுற செய்கிறது. ஜிம்மிற்கு சென்று உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் பச்சை பயிறு எடுத்துக்கொள்ளலாம்.

ஏலக்காய் : வாரத்தில் இருமுறையாவது உண்ணும் உணவில் ஏலக்காய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கும். நுரையீரலில் இருக்கும் நீரை நீக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.