தமிழ்நாட்டில் வரும் ஜூன் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை மழை வெளுத்து வாங்குமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய தொடங்கி விட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நாளை முதல் 14ம் தேதி வரை அதிகளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 10ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி , திருப்பத்தூர், திருவண்ணாமலை , விழுப்புரம் , வேலூர்,ராணி பேட்டை என 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 11ம் தேதி நீலகிரி , கோவை மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும். அதே தினத்தில் ஜூன் 10ம் தேதி நல்ல மழை பெய்யவுள்ள மாவட்ங்களுடன் சேர்த்து கூடுதலாக அரியலூர் மாவட்டத்திலும் அதிகளில் மழை பெய்யலாம்.
ஜூன் 12ம் தேதி தென்காசி, தேனி, கோவை , நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய கூடும். ஜூன் 13ம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும். 14ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி,திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யகூடும்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் குறைந்தளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் மே 24ம் தேதியே தொடங்கி விட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ காற்றால் நல்ல மழை கிடைக்கும். கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நடப்பாண்டில் மே மாதத்தில் அதிகளவு மழை கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.