உடற்பயிற்சிக்கு முன் கட்டாயம் தவிர்க்க வேண்டியவை…!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நம்மை ஆரோக்கியமாக நல்ல நடத்தைகளில் வழி நடத்துவது மிகவும் முக்கியமானது. உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்கு போய்ட்டு தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது இல்லை, வீட்டிலே சில வகையானவற்றை தவிர்த்துவிட்டு உடற்பயிற்சி செய்யும்போது அது ஆரோக்கியத்திற்கு உதவும்.
அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்: உடற்பயிற்சிக்கு முன் அதிக அளவிலான உணவுகளை உட்கொள்வதை தவிர்த்தல் வேண்டும். இதனால் வயிறு சில கோளாறுகளை உண்டாக்கும். உடற்பயிற்சி ஆரம்பித்த சில நிமிடங்களில் உடல் சோர்வு அடைய ஆரம்பித்துவிடும். உடற்பயிற்சிக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு அளவான உணவை சாப்பிடுவது நல்லது.
காபி குடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்: காபி போன்ற காஃபின் உணவுகளை உட்கொள்வது உடலை சுறுசுறுப்பு அடையச்செய்யும் என்று நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த காஃபின் பொருளை அதிகமாக உட்கொள்வது நடுக்கம். இதய துடிப்பு அதிகமாதல் போன்றவை ஏற்ப்படலாம். இதனால் உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பில் இருந்து காபியை அளவாக குடித்தல் வேண்டும்.
மது குடிப்பதை தவிர்க்கவும்: உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இது உடலின் சமநிலையை சீர்குலைத்து, நீரிழப்பு பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் உடற்பயிற்சி செய்ய விடாமல் உடலை சோர்வாக்கும்.
ஸ்ட்ரெட்சிங் செய்யக் கூடாது: உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் சிறிது லேசான வார்ம் அப் செய்தாலே போதுமானது. மாறாக வலுவான ஸ்ற்றெட்சிங் செய்தல் கூடாது. இது உடலின் தசை வலிமையை குறைக்கிறது. இதனால் உடற்பயிற்சியை அதிக நேரம் செய்ய முடியாது.
நீரோற்றமாக உடலை வைங்க: உடலை நீரோற்றமாக வைக்காமல் நாம் எந்தவொரு காரியங்களையும் செய்தல் கூடாது. உடலை வறட்சியாக வைத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்யும்போது அது உடலில் வேறுசில பிரச்சனைகளை உண்டாக்கலாம்.