காலையில் எழுந்ததும் முதலில் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்.. தெரியுமா..?
காலையில் முதலில் எழுந்ததும் குடிக்கும் தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பது அதிகம். அவற்றை என்னவென்று பார்போமா..
1. உடலை நீரேற்றம் செய்கிறது
இரவு தூங்கிய பிறகு உங்களுடைய உடல் நீரை இழக்கிறது அதனால் காலையில் எழுந்ததும் முதலில் தண்ணீர் குடிப்பதினால் அது உங்களுடைய உடலை சீராக செயல்பட உதவுகிறது.
2. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதினால் அது உங்களுடைய நாள் முழுக்க அதிக கலோரிகளை அழிக்கிறது. இதனை அன்றாடம் கடைப்பிடிப்பதினால் உடல் எடைய குறைக்கலாம்.
3. நச்சுக்களை வெளியேற்றுகிறது
இரவில் பல மணி நேர தூக்கத்திற்கு பிறகு உங்களுடை உடல் அதிக நச்சுக்களை குவிக்கிறது. இதனால் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது உடலில் குவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
4. செரிமானத்திற்கு உதவுகிறது
காலையில் தண்ணீர் குடிப்பதினால் அது செரிமான அமைப்பை சீராக்குகிறது. வழக்கமான குடல் இயக்கங்களை தூண்டுவதுடன் மலச்சிக்கலையும் தடுக்கிறது. வயிற்றை உணவு உட்கொள்வதற்கும் நாள் முழுக்க ஊட்டச்சத்து உறிஞ்சலையும் அதிகரிக்கிறது.
5. ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது
நீரேற்றமாக இருக்கும்போது ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். காலையில் தண்ணீர் குடிப்பதினால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை சரிச்செய்கிறது. சரும துளைகளில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.
6. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
காலையில் தண்ணீர் குடிக்கும்போது அது மூளையில் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
7. நிணநீர் மண்டலத்தை சமநிலைப்படுத்துகிறது
தண்ணீர் குடிப்பதினால் உங்களின் நிணநீர் மண்டலம் சீராக்குகிறது. இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது.
8. எடை இழப்பை ஆதரிக்கிறது
தண்ணீரி குடிப்பது பசி உணர்வை கட்டுப்படுத்தும். உணவிற்கு முன் தண்ணீர் குடிப்பது அதிக உணவு உட்கொள்வதை தடுக்கும்.
9. இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும்போது அது உங்கள் இதயத்தில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கிறது.
10. மனநிலை மற்றும் ஆற்றல் நிலைகளை மேம்படுத்துகிறது
இது மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. காலையில் தண்ணீர் குடிப்பது ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது.