உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ஜூஸ் குடித்திடுங்க..!!
கரும்புச்சாறில் நிறைய ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறது என்று தெரியும். ஆனால் அதிகமாக குடித்தால் ரத்த சர்க்கரை அதிகரிக்கும்.
சளி பிடிக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் தினமும் சிறிதளவு கரும்புச்சாறை குடித்து வந்தால் உடலில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
1. கரும்புச்சாறு தினமும் குடிக்கும் போது உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும்..
2. கரும்புச்சாறில் ஆன்டி ஆக்சிடண்ட், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
3. உடலை டீடாக்ஸ் செய்து கழிவுகளை வெளியேற்றும் பண்பு கொண்டதாக சொல்லப்படுகிறது.
4. கல்லீரலுக்கு கரும்புச்சாறு மிகவும் நல்லது மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கூட குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
5. கரும்புச்சாறில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இது அனீமியா என்னும் ரத்த சோகை வராமல் தடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
6. தினமும் சிறிதளவு கரும்புச்சாறு குடித்து வந்தால் ஜீரண ஆற்றல் மேம்படும். அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம் ஆகியவை குறையும் என்று சொல்லிகிறார்கள்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தா மற்றவர்களுக்கும் பகீர்ந்திடுங்கள்..