மழைக்காலத்தில் இந்த ப்ரூட் சாப்பிட மறக்காதீங்க..!!
பொதுவாக மழைக்காலம் என்பது வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, பருவ மழை நோய்களையும் அதிகரிக்கும். மழைக்காலத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும் தன்மை கொண்டது. இதனால் டைபாய்டு, டெங்கு காய்ச்சல் , சிக்கன் குனியா, தொண்டை வலி, சளி பிடித்தல், இருமல், தலைவலி போன்ற நோய்கள் உண்டாகும். இத்தகைய மழைக்காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள கூடுதல் கவனம் தேவை.
மழைக்காலத்தில் செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு அழற்சி உண்டாகும். இவற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க கட்டாயம் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.
நமது அன்றாட வாழ்க்கையில் பழங்கள் சாப்பிடுவோம் அப்படி சாப்பிடுவதுல ஒரு பழம் தான் ப்ளுப்பெர்ரி. இதுல அப்படி என்ன நன்மை கிடைக்குதுனு பார்க்கலாம் வாங்…;
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமிக்க பழம் வகைகளில் ஒன்று தான் பெர்ரி. அதுல ஒரு வகையான பழம் தான் ப்ளூபெர்ரி. இது வந்து அவுரி நெல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
ப்ளுப்பெர்ரியின் நன்மைகள் பற்றி ஒரு சிறு தொகுப்பு :
1. இதுல வந்து நார்ச்சத்து ,வைட்டமின் சி ,இந்த மாதிரி பல நூற்றியென்ட்ஸ் இருக்கு
2. இது வந்து உடல் எடையை குறைக்க உதவும்.
3. இந்த பழத்துல 85% நீர் இருக்கு.
4. இந்த ப்ளூபெர்ரி சாப்பிட்டா நம்ம இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
5. அது மட்டும் இல்லாம நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6. இதுல ஒரு ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால் பிளட் சுகர் லெவல் கட்டுப்படுத்தும்.
7. 25 ப்ளூபெர்ரி பழம் நம்ம சாப்பிட்டா ஒரு முழு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு சமம் சொல்லப்படுது .
8. அதேபோல் நம்ம ஒர்க்அவுட் பண்ண அப்புறம் இந்த பழம் சாப்பிட்டால் கொழுப்புகள் கரையும் சொல்லப்படுது.
9. இதை காலை உணவில் கூட சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்க இந்த மாதிரி பல்வேறு நன்மைகள் வந்து ப்ளூபெரில இருக்கு.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..