வெயில் காலத்தில் இது ரொம்ப முக்கியம்..!! இதை செய்ய மறக்காதீங்க..!!
வெயில் காலத்தில் நம் உடலில் உள்ள உறுப்புகளை குளிர்ச்சியாக வைக்க வேண்டுமா..? அப்போ இந்த மசாலா பொருட்களை உங்க சமையலில் சேர்த்துக்கோங்க..
கால நிலைக்கு ஏற்றால் போல் நம் உணவை மாற்றி செய்ய வேண்டும். இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால், நாம் குளிர்ச்சி தன்மை கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முழு உடல் வறண்டுபோகாமல் இருக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே வெயில் காலத்தில் மசாலாப் பொருட்கள் நம் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் என்று நினைப்போம்.
ஆனால் இது முற்றிலும் தவறு. மசாலாப் பொருட்களில் நிறைய பயோஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது . இது வெளிப்புற வெப்பம் தாங்கமல் இருக்கும் போது, நம் உள்புற உடல் வெப்பநிலையை பாதுகாக்க உதவுகிறது.
எனவே வெயில் காலத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பல பயனுள்ள மசாலாப் பொருட்களை பற்றி பார்க்கலாம் ….
இவை குளிர்ச்சி பண்பு நிறைந்தது . சிலர் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலை நேரத்தில் வெந்தய தண்ணீரை உட்கொள்ளலாம் .இது வயிற்று சூடு, குமட்டல், மலச்சிக்கல், போன்றவற்றை போக்க செய்கிறது .
கொத்தமல்லியில் புத்துணர்ச்சியூட்டும் பண்பு இருக்கிறது. கொத்தமல்லி விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால் ,இவை உடலில் இருக்கும் கெட்ட வைரஸ்களை வெளியேற்ற உதவும் மற்றும் செரிமான பிரச்சனைகளையும் நீக்குகிறது.
புதினா, கோடைகாலத்தில் நம் சருமத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். உணவில் சேர்க்க வேண்டிய மிக முக்கியமான பொருட்களில் ஒன்று . அவற்றில் குறிப்பிட்ட அளவு மெந்தோல் இருப்பதால் குளிர்ச்சி மற்றும் அஜீரணத்திற்கு எதிராக போராடும் . புதினா நறுமணம் உடலுக்கு நல்லது .
சீரகத்தில் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். சீரகம் உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். வெயில் காலத்தில் பல புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
சமையலறை மூலப்பொருளில் இருக்கும் கலவைகள் உடலின் உள் வெப்பநிலையைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். ஏலக்காயில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது. உடல் சூட்டை குறைக்கும் இயற்கை மசாலாப் பொருட்களில் ஒன்றாகும்.
இவ்வாறு செய்தால் நம் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொல்லாம் .