பாட்டி வைத்தியம்..!
நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சேர்த்து சுட வைத்து பின் ஆறவைத்து லேசான சூட்டில் நெஞ்சில் தடவ வேண்டும்.
தலைவலி:
துளசி, லவங்கம், சுக்கு சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
தொடர் விக்கல்:
நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட தொடர் விக்கல் சரியாகும்.
தொண்டை கரகரப்பு:
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் சேர்த்து வறுத்து அதனை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு சரியாகும்.
வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரத்தை காய்ச்சி நாளைக்கு மூன்று வேளை என வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
அஜீரணம்:
நீரில் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வர அஜீரணம் சரியாகும்.
உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கயை எரித்து அந்த சாம்பலை வெண்ணெயில் குழைத்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு சரியாகும்.