நன்மை தரும் மணத்தக்காளி…!! இனி இந்த பிரச்சனைகளுக்கு குட்பாய் சொல்லுங்க…!!
குடல்புண்கள், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரையின் பல நன்மைகள் என்னென்ன இருக்குனு பார்க்கலாம் வாங்க… அதை எப்படி பயன்படுத்துவது? மணத்தக்காளி பழங்களின் வேறு பல நன்மைகளை என்னென்ன தெரியுமா..?
பசியை தூண்டிவிடக்கூடிய மணத்தக்காளி கீரையில் வைட்டமின் D, E நிறைந்திருக்கின்றன. மேலும் இந்த கீரையில் ரிபோபிளோவின், வைட்டமின் C, பீட்டா கரோட்டின், கால்சியம், பொட்டாசியம் இரும்புத் தாதுக்களும் உள்ளன.
மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, இதய செயல்பாடு அதிகரிக்கும். தூக்கம் அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கண்கோளாறுகள் நீங்கும். ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சனையை தீர்க்கிறது.
இந்த கீரைகளில் நைட்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள், வயிற்றிலுள்ள கட்டிகளை கரைக்க உதவுகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது. வாய்ப் புண், வயிற்றுப்புண், வயிற்றில் கட்டியுள்ளவர்கள் இந்த கீரையில் சூப்பை அடிக்கடி செய்து குடிக்கலாம்.
சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, உள்ளிட்ட உஷ்ண கோளாறுகளை மணத்தக்காளி கீரை தீர்க்கிறது. ஜீரண சக்தியை தூண்டிவிடும்… வாய் துர்நாற்றம் இருப்பவர்கள், இந்த கீரையை கசக்கி தண்ணீரில் கலந்து வாய்க்கொப்பளித்து வந்தாலே போதும். இது வாய்ப்புண்களை ஆற்றக்கூடியது.
காதுவலி இருப்பவர்களும், இந்த சாற்றினை காதில் விடலாம். தொண்டைப்புண்களையும் இந்த சாறு ஆற்றுகிறது. சளி, இருமல், காய்ச்சல் வந்தாலும், இந்த கீரையை கடைந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
இந்த கீரையின் பழங்கள் கறுப்பு மற்றும் சிகப்பு நிறத்தில் இருக்கும். மணத்தக்காளி பழம், உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. மலச்சிக்கல் இருப்பவர்கள் இந்த பழம் சாப்பிடலாம். கட்டுக்கடங்காத காய்ச்சல் இருந்தால்,
இந்த பழத்தையும், கீரையையும் ஒன்றாக கஷாயம்போல வைத்து குடிக்கலாம். மணத்தக்காளியை வற்றலாக காயவைத்து, நெய்யில் வதக்கி பயன்படுத்தினால், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதுடன், வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்ற கோளாறுகளை நீக்கும்.
மலச்சிக்கலை நீக்கும் மருந்து தயாரிப்புகளில் மணத்தக்காளியின் வேர்கள் சேர்க்கப்படுகின்றன. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த வேண்டுமானால், இந்த வேர்கள், இலைகளை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வரலாம்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..