கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை..!
பசிக்கும்போது மட்டும் சாப்பிட வேண்டும். குளிரான பானங்களை தவிர்த்தல் வேண்டும்.
தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது உங்களின் கை விரல்களால் உணவினை எடுத்து கொள்ள வேண்டும். காரணம் செரிமானத்திற்கும் விரலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.
பழங்கள் மற்றும் இயற்கையான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அன்றாடம் நேரம் ஒதுக்கி ஏதாவது விளையாடுங்கள், விளையாட்டு சிறுவர்களுக்கானது மட்டும் இல்லை.
ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது தனிமையில் அமர்ந்து சிந்திக்க வேண்டும். அப்போதான் உங்களுடைய ஆற்றல் வெளிபடும்.
தினமும் 7 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். இரவு பத்து மணிக்கும் தூங்கி விட வேண்டும். காலை ஐந்து மணி நேரம் கழித்து தூங்க கூடாது.
ரொம்ப நேரம் டிவி பார்பதை தவிர்க்க வேண்டும். மாற்றாக நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் தரக்கூடாது. சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவிடக் கூடாது.
வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டும். இவர்கள் தான் வாழ்கையில் முக்கியம், பணம் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுக்க வேண்டும். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
தேவையான நேரத்தில் மன்னிப்பு கேட்பதும் மற்றவர்களை மன்னிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மறக்க வேண்டும். நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.