பட்டர் கார்லிக் காளான்..!
தேவையான பொருட்கள்:
உப்பில்லா வெண்ணெய் 100 கிராம்
வெங்காயம் ஒன்று நறுக்கியது
காளான் 600 கிராம்
பூண்டு கால் கப் பொடியாக நறுக்கியது
மிளகுத்தூள் ஒன்றரை ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து உப்பில்லா வெண்ணெய் 100 கிராம் சேர்த்து உருக வைக்க வேண்டும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள காளான் சேர்த்து வதக்க வேண்டும்.
காளான் மென்மையாக வந்ததும் பொடியாக நறுக்கிய கால் கப் பூண்டு சேர்த்து மென்மையாக வரும் வரை வதக்க வேண்டும்.
பின் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
மேலும் இதில் ஒன்றரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அனைத்தும் நன்றாக வெந்து திரண்டு வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் பட்டர் கார்லிக் காளான் தயார்.
குழந்தைகளுக்கு இப்படி ஈவினிங் செய்து குடுத்து பாருங்க தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
காளான் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள், அவ்வளவு ருசியாக இருக்கும்.